விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள கோட் படத்தின் பாடல்கள் மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறன.
மங்காத்தா படத்திற்கு மாஸ் மியூசிக் போட்ட யுவன் சங்கர் ராஜா, கோட் படத்தில் சொதப்பி விட்டதாக விஜய் ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள்.
ஆனால் யுவனோ, “என்னிடம் ஒரு சீனை சொல்லி மியூசிக் கேட்பார்கள். நான் சில ட்யூன்களை அனுப்ப விஜய் தான் தேர்வு செய்வார்.
அவர் தேர்வு செய்த பாடல்கள் தான் இவை. என் வேலையை தொந்தரவு செய்யாமல் விட்டாலே நான் என்னுடைய சிறந்த பாடல்களை கொடுப்பேன்” என நண்பர்களிடம் புலம்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.