கேரளாவின் வயநாட்டில் கடந்த மாதம் 30-ந்தேதி அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவால் சுமார் 400 பேர் உயிரிழந்தனர்.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சினிமா நடிகர்கள், தொழிலதிபர்கள் உட்பட பலர் நன்கொடை அளித்து வருகின்றனர்.
அந்தவகையில், நடிகர் விக்ரம் ரூ.20 லட்சமும், சூர்யா, கார்த்தி, ஜோதிகா இணைந்து ரூ.50 லட்சமும், நயன்தாரா விக்னேஷ் சிவன் இணைந்து ரூ.20 லட்சமும் வழங்கினர்.
இந்நிலையில், தமிழ் திரையுலகினர் சார்பில், நடிகைகள் குஷ்பு, மீனா, சுஹாசினி, லிசி ரூ.1 கோடி நன்கொடை வழங்கி உள்ளனர்.
அது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் நடிகை குஷ்பு பகிர்ந்துள்ளார்.
“சென்னையைச் சேர்ந்த சிலர் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவுடன் வயநாடு பேரிடர் நிவாரணத்திற்காக 1 கோடி ரூபாய் வழங்கினோம்.” என்று பதிவிட்டுள்ளார்.