விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செல்லம்மா சீரியல் முடிவுக்கு வர இருக்கும் தகவல் தான் சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘செல்லம்மா’ சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரங்களில் அன்ஷிதா மற்றும் அர்னவ் நடித்திருக்கிறார்கள்.
குழந்தை நட்சத்திரமாக கண்மணி நடித்துள்ளதுடன், இந்த சீரியலில் கதாநாயகி ஏற்கனவே கல்யாணம் முடித்து ஒரு குழந்தைக்கு அம்மாவாக இருக்கிறார்.
பின்னர், அவருக்கு தன்னுடைய மாமா பையனான கதாநாயகன் மீது காதல் ஏற்படுகிறது. அவர்கள் இருவரும் சேர்ந்தார்களா? இல்லையா? என்பதுதான் கதைக்களமாக இருக்கிறது.
இதற்கு இடையே செல்லம்மாவின் முதல் கணவர் அடிக்கடி வந்து பிரச்சனை செய்து கொண்டே இருக்கிறார். தற்போது இந்த சீரியலில் பல பிரச்சினைகள் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் சீரியலும் விரைவில் முடிவுக்கு வரவிருக்கிறது.
செல்லம்மா சீரியல் 700 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் சிறையில் முடிவுக்கு வர இருக்கிறது. அத்துடன், கிளைமாக்ஸ் ஷூட்டிங் வீடியோ வெளியாகி உள்ளது.