1996 ஆம் ஆண்டு “இந்தியன்” திரைப்படத்தில் மனிஷா கொய்ராலா மற்றும் ஊர்மிளா ஆகிய இரண்டு நடிகைகள் நாயகிகளாக நடித்திருந்தனர்.
இதில் நடிகை ஊர்மிளா கடந்த 2016 ஆம் ஆண்டு மோசின் அக்தர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஊர்மிளாவை விட அவரது கணவருக்கு 10 வயது குறைவு ஆகும்.
இந்த நிலையில், கணவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று மும்பை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகை ஊர்மிளா மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நான்கு மாதத்திற்கு முன்பே அவர் மனு தாக்கல் செய்து விட்ட நிலையில், இருவரும் ஒருமித்த மனதுடன் விவாகரத்து மனு தாக்கல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், இந்த விவாகரத்து மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை ஊர்மிளா கடந்த 2019 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், வடக்கு மும்பை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன் பின்னர் சிவசேனா கட்சியில் இணைந்தார்.