நடிகர் அஜித் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார். விடாமுயற்சி படத்தை பொறுத்தவரை இறுதி கட்டத்தை நெருங்கியிருக்கிறது.
தீபாவளிக்கு படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்து விட வேண்டும் என படக்குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
விடாமுயற்சி படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் 16 ஆம் தேதியுடன் முடிகிறது. இதனால், கடந்த ஒரு வாரமாக 18 மணி நேரம் ஒரே நேரத்தில் விடாமுயற்சி படத்திலும் குட் பேட் அக்லி படத்திலும் அஜித் நடித்து வருகிறாராம்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படம் அடுத்த வருடம் பொங்கல் ரிலீஸ் என படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதே அறிவித்துவிட்டார்கள்.
இந்த நிலையில், குட் பேட் அக்லி படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகாது என்று சொல்லப்படுகிறது. அத்துடன், குட் பேட் அக்லி படத்தை ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக கூறுகிறார்கள்.
ஏற்கெனவே அதே தேதியில் தான் ரஜினியின் கூலி திரைப்படமும் வெளியாக இருக்கிறது.
இதற்கு முன் பேட்ட மற்றும் விஸ்வாசம் போன்ற படங்கள் ஒரே தேதியில்தான் ரிலீஸ் ஆனது. குறிப்பிடத்தக்கது.