கடந்த 2020 ஆம் ஆண்டு ரிலிஸான மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா, ஆர் ஜே பாலாஜி மற்றும் ஊர்வசி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்து என் ஜி சரவணன் இயக்கியிருந்த நிலையில், ஆர் ஜே பாலாஜி, மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இதற்கு மாசானி அம்மன் என பெயர் வைத்து வேலையை ஆரம்பித்துள்ளதாகவும், முதல் பாகத்தை தயாரித்த வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தைத் தயாரிக்கவில்லை என சொல்லப்பட்டது.
இதற்கிடையில், பாலாஜிக்கு போட்டியாக வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2 வை எடுக்க உள்ளதாக திடீர் அறிவிப்பை சில வாரங்களுக்கு முன்னர் வெளியிட்டது.
இந்நிலையில் இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சுந்தர் சி-யை இந்த படத்தை இயக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.