தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, பாலிவுட் என பிஸியாக மாறி இருக்கும் அனிருத் தற்போது ’தேவாரா’, ’வேட்டையன்’, ’விடாமுயற்சி’, ’இந்தியன் 3’, ’கூலி’, ’லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’, ’SK 23’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில், வெளிநாட்டில் இசை நிகழ்ச்சி உட்பட சில நிகழ்ச்சிகளை நடத்தி வரும் அனிருத், ஒரு ஆல்பம் பாடலை கம்போஸ் செய்துள்ளதாகவும், இந்த ஆல்பத்தில் அவரே நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆல்பத்தில் அனிருத்துடன் இணைந்து பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா நடனமாட இருப்பதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்ரீலீலா இன்னும் அவர் ஒரு தமிழ் படத்தில் கூட நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.