விண்வெளியில் நடக்கும் முயற்சியை SpaceX நிறுவனம் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.
விண்வெளியில் நடக்கும் முயற்சியை வெற்றிகரமாக முடித்த முதல் தனியார் நிறுவனம் இதுவாகும்.
பூமியிலிருந்து 700 கிலோமீட்டர் தொலைவில் SpaceX விண்கலத்திலிருந்து செல்வந்தரான ஜேரட் ஐஸாக்மான் என்பவரும், SpaceX நிறுவனத்தின் பொறியாளர் சாரா கிலிஸ் ஆகிய இருவர் வெளியேறினர்.
அவர்கள் விண்வெளியில் நடப்பதற்கு அரை மணி நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில், தயாராவதற்குக் கூடுதல் நேரம் தேவைப்பட்டதால் மொத்தம் சுமார் 2 மணி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது.
4 பேர் அடங்கிய குழு இருந்த விண்கலம் கடந்த செப்டம்பர் 7 திகதி விண்வெளிக்கு பயணித்ததுடன், 1,400 கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்தது.
கடந்த 50 ஆண்டுகளில் மனிதர்கள் மேற்கொண்ட ஆகத் தூரமான விண்வெளிப் பயணம் இதுவாகும்.