நடிகை சமந்தாவிற்கு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வாய்ப்புகள் குறைந்து வருவதால் பாலிவுட்டில் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
பல வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும், சமீபகாலமாக சமந்தாவுக்கு பெரிய வெற்றிப்படங்கள் இல்லை.
தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவிலும் வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் தற்போது பாலிவுட் பக்கம் திரும்பியுள்ளார்.
தமிழில் பானா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன் வசந்தம், அஞ்சான், 10 எண்றதுக்குள்ள, தங்க மகன், தெறி, மெர்சல், காத்துவாக்குல ரெண்டு காதல் என்று பல படங்களில் நடித்துள்ளார்.
இதில், ஒரு சில படங்கள் மட்டுமே அவருக்கு ஹிட் படங்களாக அமைந்த நிலையில், தமிழில் போதுமான வாய்ப்பு கிடைக்கவில்லை.
2022 ஆம் ஆண்டு திரைக்கு வந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.
இந்த நிலையில், தெலுங்கு சினிமாவிற்கு சமந்தா குட்பை சொன்னதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தெலுங்கு சினிமாவில் போதுமான வாய்ப்பு இல்லை என்பதாலும், நாக சைதன்யாவின் 2ஆவது திருமணம் என்பதாலும், அவர் தெலுங்கில் தலைமுழுகியுள்ளார்.
2015 ஆம் ஆண்டு முதல் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் காதலித்து வந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் பிரிந்தனர்.
இந்த நிலையில் தான் 3 ஆண்டுகளுக்கு பிறகு நாக சைதன்யா 2ஆவதாக நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.
நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா இருவருக்கும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இது குறித்து சமந்தா எந்த பதிவும் பதிவிடவில்லை என்பதுடன் அமைதியாக இருந்து வருகிறார்.