2008 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘உங்களில் யார் அடுத்த பிரபு தேவா’ என்ற நடன நிகழ்ச்சியில் நடிகை சாய் பல்லவி பங்குபற்றினார்.
பின்னர் 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளி வந்த “பிரேமம்” என்ற திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தின் மூலம் சாய்பல்லவி ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார்.
பின்னர் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். மேலும், தென்னிந்திய சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவராக சாய்பல்லவி திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் அமரன் படத்தில் நடித்து உள்ள நிலையில், இந்த படம் தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன். இவர் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான சித்திரை செவ்வானம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியிருந்தார்.
இவருக்கு சில மாதங்களுக்கு வினீத் என்பவருடன் மிக எளிமையாக இவரின் நிச்சயத்தார்தம் நடந்தது. கடந்த வாரம் சாய் பல்லவி தங்கை பூஜாவிற்கு திருமணம் நடைபெற்றது.
தன்னுடைய தங்கையின் திருமணத்தில் சாய் பல்லவி முன்னின்று அனைத்தையும் செய்து இருந்தார்.
இந்த நிலையில் தன்னுடைய தங்கையின் திருமண விழாவில் நடிகை சாய் பல்லவி ஸ்பெஷலாக நடனமாடிய வீடி யா இணையத்தில் வைரலாகி வருகிறது.