தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா, ஹிந்தியில் அனிமல் படத்தில் நடித்திருந்தார்.
தற்போது இவர் புஷ்பா 2, விக்கி கவுஷலுடன் சாவா, சிக்கந்தர், தமிழில் தனுஷுடன் குபேரா போன்ற படங்களில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், ராஷ்மிகா மந்தனா ஆதித்யா சர்போத்தர் இயக்கத்தில் வேம்பையர் ஆப் விஜயநகரம் என்ற ஹாரர் கலந்த காமெடி திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த ஹாரர் படம் வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.