சீரியலில் அறிமுகமாகி மேயாத மான் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பிரியா பவானி சங்கர்.
தொடர்ந்து யானை, குருதியாட்டம், கடைக்குட்டி சிங்கம், ரத்தினம், பொம்மை போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், பிரியா பவானி சங்கர் தனது திருமணம் குறித்து பேசி உள்ளார்.
தான் ராஜ் என்பவரை காதலித்து வருவதாகவும் அடுத்த ஆண்டு திருமணம் செய்ய போவதாகவும் ப்ரியா பவானி சங்கர் கூறியுள்ளார்.