அடுத்தடுத்து எழுந்த பாலியல் குற்றச்சாட்டுகளால் மலையாள திரைப்படம் உலகமே அதிர்ந்து போய் உள்ளது.
இந்த நிலையில், கேரளத்து திரையுலகில் பயன்படுத்தப்படும் கேரவனில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டு இருப்பதாக நடிகை ராதிகா குற்றம் சாட்டியுள்ளார்.
அதனால், கேரவனுக்கு பயந்து தான் ஹோட்டலில் தங்கியதாக நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நடிகைகள் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா, இயக்குநர்கள் ரஞ்சித், பிரகாஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.