சினிமாவில் அனிருத் பிரபலமாவதற்குக் முன்பு அவரும் தனுஷும் இணைந்து ஒய் திஸ் கொலவெறி பாடலை உருவாக்கினார்கள். இந்த பாடல் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது.
யுடியூப்பில் அதிகம் பேர் பார்க்கப்பட்ட பாடலாக ஒய் திஸ் கொல வெறி பாடல் இருந்தது. அதன்பின், அந்த சாதனையை தனுஷே முறியடித்தார்.
அவரின் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடலை யுடியூப்பில் 10 கோடிக்கும் மேல் பார்த்து ரசித்தார்கள்.
இப்போது வரை அதிகம் பேர் யுடியுப்பில் பார்த்து ரசித்த தமிழ் சினிமா பாடலாக ரவுடி பேபி பாடல் இருக்கிறது.
இந்த நிலையில், சமீபகாலமாக திரைப்படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வரும் தனுஷ் தனது சகோதரி மகன் முக்கிய வேடத்தில் நடிக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை இயக்கினார்.
இந்நிலையில், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் இடம் பெற்ற கோல்டன் ஸ்பேரோ பாடலை யுடியூப்பில் 5 கோடி பேர் பார்த்து ரசித்திருக்கிறார்கள்.
இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். ஆல்பத்திற்காக இந்த பாடலில் நடிகை பிரியங்கா மோகன் நடனமாடியிருந்தார்.