நைஜீரியாவின் வடபகுதியில் வீதிகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் பலவித விலங்குகள் வெளியே வந்துள்ளன.
போர்னோ மாநிலத்தின் Maiduguri நகரின் வெள்ளத்தில் முதலை, பாம்பு, வான்கோழி, நீர் யானைகூட வெளியில் தென்பட்டுள்ளன.
சில விலங்குகள் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டதுடன், சில விலங்குகள் எங்கிருந்து வந்தன என்பதே தெரியவில்லை.
தற்போது விலங்குகளைப் பிடிக்கும் முயற்சி நடைபெறுவதுடன், வான்கோழியைப் பிடித்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
ஆனால் முதலைகள் இருக்கும் இடத்தை எட்டுவதில் சிரமம் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளதுடன், மைதுகுரி நகரில் வெள்ளத்தால் 280,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 200,000 பேர் செல்ல வீடில்லாமல் தவிப்பதுடன், நைஜீரியாவில் அண்மை வாரங்களாக நீடிக்கும் வெள்ளத்தில் சுமார் 230 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.