கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 30 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் தரைமட்டமாயின.
இந்த சம்பவம் காரணமாக வீடுகளுக்குள் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தனர்.
இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், நிலச்சரிவை தொடர்ந்து ராணுவம், காவல் துறை, தீயணைப்பு துறை, தன்னார்வலர்கள் என பலதரப்பினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் தனுஷ் கேரளா நிலச்சரிவு மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு ரூ. 25 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
முன்னதாக தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகர், நடிகைகள் கேரளாவுக்கு நிதி உதவி அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.