நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் தந்தையான தியாகராஜா இயக்கத்தில் அந்தகன் படத்தில் நடித்துள்ளார்.
சிம்ரன், சமுத்திரகனி, யோகி பாபு ,ஊர்வசி, கே எஸ் ரவிக்குமார் ,வனிதா விஜயகுமார் உள்ளிட்டவர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
நேற்று வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வருவதுடன், வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, அந்தகன் திரைப்படம் ஒரே நாளில் 70 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
வார இறுதி நாட்கள் என்பதால் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.