குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமான நடிகையான ஸ்வர்ணமால்யா, அலைபாயுதே படத்தில் ஷாலினிக்கு அக்காவாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். தொடர்ந்து கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்தார்.
இந்தச் நிலையில், தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “திருமணம் செய்துகொண்டு வெளிநாடு செல்ல வேண்டும் என்ற முடிவை நான் எடுக்கவே இல்லை. எனது பெற்றோர்கள்தான் எடுத்தார்கள்.
திருமணமான பிறகு ரிலாக்ஸாக இருக்கலாம் என்றுதான் நினைத்தேன். ஆனா அது பெரிய தவறு பின்னால்தான் புரிந்தது. திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னைக்கு சினிமா காரணம் இல்லை.
எனது தாத்தா சினிமாவில் இருந்தவர்தான். ஆனால் எனக்கு சினிமாவில் வழிகாட்ட சரியான ஆள் இல்லை. எந்த இலக்கும் இலக்கும் இல்லாமல் சினிமாவில் இருந்ததால் யாரிடமும் ஆலோசனையும் செய்யவில்லை.
மணிரத்னம் போல் ஒரு இயக்குநர், தயாரிப்பாளரிடம் வேலை செய்த பிறகு எல்லா தயாரிப்பாளர்களும் அவர் மாதிரியே இருப்பார்கள் என்றுதான் நினைத்தேன்.
ஒரு ஆபாச திரைப்படத்தில் எனக்கே தெரியாமல் நடித்துவிட்டேன். அதில் பத்து நிமிடங்கள்தான் நான் நடித்தேன். அதுவும் ஒரு கெஸ்ட் ரோல்தான். அந்தப் படம் ஒரு டப்பிங் படம்தான்.
ஒரிஜினல் படத்தின் சிடியையும் என்னிடம் கொடுத்தார்கள். அந்தக் காட்சியில் நடிப்பதற்கு நான் ஒப்பந்தத்தில் கையெழுத்தும் போட்டிருக்கிறேன். அப்படி என்றால் நான் எவ்வளவு விளையாட்டுத்தனமாக இருந்திருக்கிறேன்.
இப்படி நான் தவறுகள் செய்திருந்தாலும் எனது வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு என்றால் அது திருமணம்தான்” என்றார்.