உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் வேர்ப்பதற்கான காரணம் என்ன தெரியுமா?

உள்ளங்கை

உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் வேர்ப்பதற்கான காரணம்

உடல் வியர்ப்பது என்பது இயல்பான ஒன்று. எனினும், சாதாரண நிலையில், இயல்பான வெப்ப நிலை இருந்தும் அதிகமாக வியர்வை ஏற்படுவதை ஹைப்பர் ஹைட்ரோசிஸ் என்று அழைக்கிறோம்.

இதில் வியர்வை சுரப்பிகளில், நரம்புகளின் அதீத செயல்பாட்டால் நரம்பு முடிச்சுகள் தூண்டப்பட்டு அதிகமாக வியர்வை சுரக்கின்றது.

இது குறிப்பாக பாதங்கள், கைகள், முகம், நெற்றி, கழுத்து, அக்குள் போன்ற இடங்களில் இயல்பை விட அதிகமாக வியர்வையை ஏற்படுத்தும்.

இவ்வாறு வியர்வை ஏற்படுவது இது இரண்டு வகைப்படும்.

இளவயதில் காரணம் இல்லாமல் அதிகமாக வியர்வை ஏற்படுவதை ஓவர் ஆக்டிவ் பெர்ஸ்பிரேஷன் அல்லது பிரைமரி ஹைபர் ஹைட்ரோசிஸ் என்று கூறுகிறோம். மரபணு காரணங்களால் இளம் வயதினருக்கு இது ஏற்படும்.

அத்துடன், நீரிழிவு நோய் அல்லது ஹார்மோன் சமநிலையின்மை, தைராய்டு பிரச்சனை, உடல் பருமன், மாதவிடாய் நிறுத்தம், மன அழுத்தம், நோய் தொற்று, பார்க்கின்சன் நோய் போன்ற மருத்துவ காரணங்களாலோ அல்லது மருந்துகளின் பக்க விளைவுகளாலோ வியர்வை அதிகமாக ஏற்படுவதை செகன்டரி ஹைபர் ஹைட்ரோசிஸ் என்று அழைக்கிறோம்.

ஹைபர் ஹைட்ரோசிஸின் காரணமாக சிலருக்கு வியர்வை தொற்று பாதிப்பு எற்படலாம். மேலும் உடலில் இருந்து வீசும் துர்நாற்றம் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்குகிறது.

அதிக வியர்வை பிரச்சினைக்கு தீர்வாக சில வழிமுறைகள்

  • தினமும் 2 முறைக்கு மேல் குளிக்க வேண்டும்
  • பாலியஸ்டர் உடைகளை தவிர்த்து மெல்லிய மிருதுவான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்,
  • கிளைகோ பைரோலேட் கிரீம், ஆன்டி பெர்ஸ்பிரன்ட்ஸ், நரம்பு தடுப்பான்கள் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் மருந்துகள் பயன் தரும்.
  • மேற்கூறிய அனைத்தும் பலனளிக்கவில்லை எனில் போட்டாக்ஸின் போன்ற நியூரோடாக்ஸின் ஊசியை உட்செலுத்துதல், மைக்ரோவேவ் தெரபி, அயோன்டோபோரோசிஸ், சிம்பதெக்டமி போன்ற வழிமுறைகள் இப்பிரச்சனைக்கு தீர்வு தரும்.
  • இந்த முயற்சிகளும் தோல்வியுற்றாலும் கூட வியர்வை சுரப்பிகளை அறுவை சிகிச்சையின் மூலமாக அகற்றி இந்நோயை கட்டுப்படுத்தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *